சென்னை மெரினா கடற்கரைக்குப் பொதுமக்கள் செல்ல வழக்கம்போல் அனுமதி…!

Default Image

ஆயிரத்துக்கு மேற்பட்ட காவலர்கள் சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தை தடுக்க  குவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று கெடுபிடிகளைத் தளர்த்திப் பொதுமக்கள் கடற்கரைக்கு நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்துச் சென்னைப் பட்டினப்பாக்கம் கடற்கரையில் நூற்றுக்கு மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஞாயிறு அன்றும் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் எனக் கருதி அதைத் தடுப்பதற்காகக் கடற்கரை முழுவதும் ஆயிரத்துக்கு மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடற்கரைச் சாலையில் இருந்து கடற்கரைக்கு எந்த வாகனமும் செல்ல முடியாத அளவுக்குத் தடுப்பரண் அமைக்கப்பட்டுள்ளது. காலையில் இருந்து பிற்பகல் வரை பொதுமக்கள் ஒரு சிலர்தான் வந்த நிலையில் பிற்பகல் 2மணிக்கு மேல் வழக்கம்போல் ஏராளமானோர் கடற்கரைக்கு வந்தனர். வந்தவர்களின் வாகனங்களைக் கடற்கரை அணுகுசாலைக்கு அனுமதிக்காததால் கடற்கரைக் காமராசர் சாலையின் நடைபாதையிலேயே நிறுத்திவிட்டு நடந்து சென்றனர்.

இதனால் நடைபாதையில் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. காவல்துறைக் கெடுபிடிகளைச் சற்றுத் தளர்த்தியதால் உழைப்பாளர் சிலையில் இருந்து கண்ணகி சிலை வரையுள்ள பகுதி வழியாகப் பொதுமக்கள் கடற்கரைக்கு நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் மக்களோடு மக்களாகக் கலந்து போராட்டக்காரர்கள் வரக்கூடும் எனக் கருதிக் குதிரைப்படையினர் கடற்கரையோரம் சுற்றுக்காவலில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்