சென்னை மெரினாவில் காவிரி வாரியம், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம்!வேல்முருகன் அறிவிப்பு
சென்னை மெரினாவில் உழைப்பாளர் சிலை அருகே 29 ஆம் தேதி கட்சிகளின் கொடியின்றி போராட்டம் நடத்தப்படும் காவிரி வாரியம், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்த உள்ளதாக வேல்முருகன் அறிவித்துள்ளார்.
வரும் 29 ம் தேதி உழைப்பாளர் சிலை அருகே போராட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கேட்டோம்; காவல்துறை அனுமதி வழங்கவில்லை என்று தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
எந்த அரசியல் சாயம், கொடிகள் இல்லாமல் மெரினாவில் ஒன்றுக் கூடுவோம். அறவழி போராட்டமாகவே நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றும் தமிழக அரசு போராடுபவர்களை ஒடுக்குவதையே வேலையாக கொண்டுள்ளது. மத்திய அரசின் கைப்பாவையாக தமிழக அரசு செயல்படுவதாக வேல்முருகன் குற்றச்சாட்டு.
இதற்கு முன் நேற்று சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், சென்னையில் பனகல் மாளிகை அருகே ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிப்பு, பொதுமக்களில் இயல்பு வாழ்க்கை இடையூறு போன்ற காரணங்களால் சைதாப்பேட்டையில் பனகல் மாளிகை, கருணாநிதி நுழைவுவாயில் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்த கடந்த 2012-ஆம் ஆண்டே தடை விதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.இந்த தடையை மீறியும், போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என தெரிந்தும் சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் பனகல் மாளிகை அருகே போராட்டங்கள் அறிவித்து வருவதாகவும், தடை செய்யப்பட்ட இடத்தில் ஆர்ப்பாட்டமோ, ஊர்வலமோ நடத்த முயற்சிப்பவர்கள், கைது செய்யப்பட்டு, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.