சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், சென்னையில் பனகல் மாளிகை அருகே ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிப்பு, பொதுமக்களில் இயல்பு வாழ்க்கை இடையூறு போன்ற காரணங்களால் சைதாப்பேட்டையில் பனகல் மாளிகை, கருணாநிதி நுழைவுவாயில் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்த கடந்த 2012-ஆம் ஆண்டே தடை விதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.இந்த தடையை மீறியும், போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என தெரிந்தும் சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் பனகல் மாளிகை அருகே போராட்டங்கள் அறிவித்து வருவதாகவும், தடை செய்யப்பட்ட இடத்தில் ஆர்ப்பாட்டமோ, ஊர்வலமோ நடத்த முயற்சிப்பவர்கள், கைது செய்யப்பட்டு, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…