சென்னை நுங்கம்பாக்கத்தில் சாஸ்திரி பவனை மே 17 இயக்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் …!
தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து,போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மே 17 இயக்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ரெயில் மறியல், சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு மே 17 இயக்கத்தினர் திருமுருகன் காந்தி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அனைவரையும் போலீசார் குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தி கைது செய்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.