சென்னை திருவிடந்தையில் பிரமாண்ட ராணுவ தளவாடக் கண்காட்சி தொடங்கியது …!
ராணுவத் தளவாடக் கண்காட்சி சென்னை அருகே மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ராணுவ கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலாசீத்தாராமன், இணையமைச்சர் சுபாஷ்பாம்ரே, இந்திய ராணுவ தளபதி பிபின்ராவத், கடற்படை தளபதி சுனில் லம்பா உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். நாளை நடைபெறும் அதிகாரப்பூர்வ துவக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார்.
தமிழகத்தில் முதன்முறையாக நடத்தப்பட உள்ள இக்கண்காட்சியில் அமெரிக்கா, கனடா, ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட 60 நாடுகளிலிருந்து அதிநவீன போர்க்கருவிகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. விமானப்படை ஹெலிகாப்டர்களின் சாகச நிகழ்ச்சிகளுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. கண்காட்சியின் இறுதி நாளான 14ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்