சென்னை கமிஷ்னர் அலுவலகம் அருகே அரசு பேருந்து கண்ணாடியை மர்ம ஆட்கள் கல்வீசித் தாக்கினர்.
இதில் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்தன. இதேபோல் அண்ணா நகர், முதலியார்பேட்டை ஆகிய பகுதிகளிலும் பேருந்துகள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. 5 அரசு பேருந்துகளும் ஒரு தனியார் பேருந்தும் தாக்குதலுக்குள்ளாயின. இந்தத் தாக்குதல்களில் ஓட்டுநர் ஒருவரும் நடத்துநர் ஒருவரும் காயமடைந்தனர். இதையடுத்துப் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த தமிழக அரசு பேருந்துகள் அனைத்தும் காவல்துறையினர் பாதுகாப்புடன் மறைமறையடிகள் சாலையில் உள்ள பணிமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டன.
இதே போல் திண்டுக்கல்லில் இருந்து திருச்சி மாவட்டம் முசிறி நோக்கிச் சென்ற அரசு பேருந்து சீலப்பாடி அருகே வந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம ஆட்கள் பேருந்தின் மீது கல்வீசித் தாக்கினர்.
பேருந்தின் கண்ணாடி உடைந்ததால் பயணிகள் அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கி ஓடினர்.
அதேபோல் திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து நந்தவனப்பட்டி அருகே வந்தபோது மர்ம ஆட்கள் கண்ணாடிகளை உடைத்துவிட்டுத் தப்பிச் சென்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இன்று மக்கள் பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாடி வரும் நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை…
சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…