சென்னை கமிஷ்னர் அலுவலகம் அருகே அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு …!பல்வேறு பகுதிகளில் பேருந்துகள் மீது தாக்குதல்…!

Default Image

சென்னை கமிஷ்னர் அலுவலகம் அருகே அரசு பேருந்து கண்ணாடியை மர்ம ஆட்கள் கல்வீசித் தாக்கினர்.

இதில் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்தன. இதேபோல் அண்ணா நகர், முதலியார்பேட்டை ஆகிய பகுதிகளிலும் பேருந்துகள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. 5 அரசு பேருந்துகளும் ஒரு தனியார் பேருந்தும் தாக்குதலுக்குள்ளாயின. இந்தத் தாக்குதல்களில் ஓட்டுநர் ஒருவரும் நடத்துநர் ஒருவரும் காயமடைந்தனர். இதையடுத்துப் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த தமிழக அரசு பேருந்துகள் அனைத்தும் காவல்துறையினர் பாதுகாப்புடன் மறைமறையடிகள் சாலையில் உள்ள பணிமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டன.

இதே போல்  திண்டுக்கல்லில் இருந்து திருச்சி மாவட்டம் முசிறி நோக்கிச் சென்ற அரசு பேருந்து சீலப்பாடி அருகே வந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம ஆட்கள் பேருந்தின் மீது கல்வீசித் தாக்கினர்.

பேருந்தின் கண்ணாடி உடைந்ததால் பயணிகள் அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கி ஓடினர்.

அதேபோல் திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து நந்தவனப்பட்டி அருகே வந்தபோது மர்ம ஆட்கள் கண்ணாடிகளை உடைத்துவிட்டுத் தப்பிச் சென்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்