சென்னை ஐஐடி வளாகத்துக்குள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் …!

Default Image

இதேபோல்  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழகத்தில் ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) சென்னையில் நடைபெறும் ராணுவ கண்காட்சியை துவக்க விழா, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் வைர விழா ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார்.

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்றைய தினம் அனைவரும் கருப்பு உடை அல்லது கருப்பு பேட்ஜ் அணிய வேண்டும் எனவும், அனைவரது வீடுகளிலும் கருப்பு கொடியேற்றி துக்க நாளாக அனுசரிக்க வேண்டும் எனவும், திமுக ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில்,சென்னை ஐஐடி வளாகத்துக்குள் பிரதமர் மோடிக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.மோடியின் வாகனம் சென்ற போது எதிர்ப்பு பலகையை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர் .காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மோடிக்கு எதிராக போராட்டம் மேலும் ஐ.ஐ.டி வளாகத்திற்குள் மாணவர்கள் சிலர் மோடிக்கு எதிராக பதாகை ஏந்தி முழக்கத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்