சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்ட புதிய அச்சகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். நீதிமன்ற வளாகத்தில் ஏற்கனவே தமிழக அரசு கிளை அச்சகம் உள்ளது. இதில் 2000ம் ஆண்டு வாங்கிய இயந்திரம் உள்ளது. இதில் ஒரே நேரத்தில் 16 பிரதிகள் மட்டுமே எடுக்க முடியும். நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வழக்காடிகள், காவல்துறை என பல தரப்பினருக்கும் வழங்கப்பட வேண்டிய நீதிமன்ற உத்தரவு நகல்கள், வழக்கு குறித்த விவரங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பல்வேறு தரப்பினரும் அவதிக்குள்ளாகினர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தற்போது புதிதாக ஒன்றரை கோடி ரூபாய் செலவில் புது இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது. இந்த நவீன இயந்திரத்தில் ஒரே நேரத்தில் 32 பிரதிகள் வரை எடுத்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…