சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அண்ணாவின் சிலை அருகே திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் மறியல்….!

Default Image

சென்னை அண்ணா சாலையில்  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அமர்ந்து மறியல் போராட்டம் நடத்திய திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அண்ணா சமாதி நோக்கி பேரணி மேற்கொண்டுள்ளார்.

இன்று தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி  முழு அடைப்பு நடைபெறுகிறது. இதனால் தமிழகம் ஸ்தம்பித்துள்ளது.

காவிரி உரிமைகளைப் பெறுவதில் அரசியல் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று கூறி ஸ்டாலின் அழைப்பை ஏற்று திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் நடத்தும் முழு அடைப்புக்கு பாமக, கொமதேக, லதிமுக, மஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு போராட்டத்தில் குதித்துள்ளது.

அதேபோல தமிழகத்தைச் சேர்ந்த 15 போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் 90 சதவிகிதம் போக்குவரத்து முடங்கியுள்ளது.

இன்று காலை 6 மணி முதல் கடைகள் மூடப்பட்டன. குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்பட்டன. மற்ற மாநில பேருந்துகளும் தமிழக எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. 5-ஆவது நாளாக திமுக மறியல் போராட்டம் நடத்தி வருகிறது. சென்னை அண்ணா சாலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மறியல் செய்து வருகின்றன.

ஸ்டாலின் சாலையில் அமர்ந்து மறியல் செய்துள்ளார். அதேபோல தோழமை கட்சி தலைவர்களான திருநாவுகரசர், திருமாவளவன் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதனையடுத்து தோழமை கட்சி தலைவர்களோடு கையில் கறுப்புக் கோடி ஏந்திஅண்ணா சமாதி நோக்கி பேரணி மேற்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்