சென்னையில் வள்ளுவர் கோட்டம், சேப்பாக்கம், ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட 27 இடங்களில் போராட்டம் நடத்த காவல் துறை அனுமதியளிதுள்ளது.
பனகல் மாளிகை அருகே போராட்டம் நடத்துவதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் என்றும் தடை செய்யப்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டமோ, ஊர்வலமோ நடத்தினால் கைது செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.போராட்டத்தில் ஈடுபடும் கட்சி, அமைப்புகளின் வாகனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
காவிரி பிரச்னை, விவசாயிகள் பிரச்சனைக்காக தொடர்ந்து போராடி வருபவர் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு. இவர் டெல்லியில் 40 நாட்கள் நடத்திய போராட்டம் வித்தியாசமானது. இப்போது சென்னை மெரினா கடற்கரையில் 90 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதியளிக்கும்படி போலீசாரிடம் மனு அளித்துள்ளார். இதற்கு போலீசார் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து அய்யாகண்ணு கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை மெரினா கடற்கரையில் 90 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதியளிக்கும்படி காவல் துறையினருக்கு உத்தரவிடக் கோரி’ மனுத்தாக்கல் செய்தார்.
கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி காவிரி விவகாரத்தைவிட மெரினாதான் தமிழக அரசுக்கு முக்கியமா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
போராட்டத்தை ஒழுங்கு படுத்த மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளது, போராட்டத்தை தடுக்க அதிகாரமில்லை என்றும் மெரினாவில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரும் அய்யாக்கண்ணு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…