போக்சோ சட்டத்தின் கீழ், சென்னை திருநின்றவூர் அருகே 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பினி ஆக்கிய ஆட்டோ ஓட்டுனரை போலிசார் கைது செய்தனர்.
திருநின்றவூர் நெமிளிச்சேரி ரயில் நிலையம் பகுதியில் டீ கடை நடத்தி வரும் பெண் ஒருவர், உடல் நிலை சரியில்லாத தன்னுடைய 12 வயது மகளுக்கு ஜூஸ் வாங்கி அதனை ஆட்டோ ஓட்டுனர் பரமசிவத்திடம் கொடுத்தனுப்பியுள்ளார். சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட பரமசிவன், ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். சில நாட்கள் கழித்து சிறுமியை மிரட்டி மீண்டும் வன்புணர்வு செய்துள்ளான்.
வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமியை மருத்துவமனையில் பரிசோதித்தபோது, 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். ஆட்டோ ஓட்டுனர் பரமசிவன் சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டது விசாரணையில் தெரியவந்ததையடுத்து திருநின்றவூர் போலிசார் பரமசிவனை, POCSO சட்டத்தில் கைதுசெய்தனர். பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…