சென்னையில் வேறு வழியில்லாமல் பறக்கவிட்ட கருப்பு பலூன்களை ஊசி வைத்து உடைத்த போலீஸார்…!
பிரதமர் மோடிக்கு எதிராக சென்னையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கருப்பு பலூன்களை பறக்கவிட்டனர். பின்னர் போராட்டக்காரர்கள் பறக்கவிட கொண்டு வந்த கருப்பு பலூன்களை போலீசார் ஊசி வைத்து உடைத்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த 1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தச் சூழலில் சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டப்போவ தாக திமுக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்தன. மேலும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும் கருப்புச் சட்டை அல்லது கருப்பு பேட்ஜ் அணிந்தும் எதிர்ப்பு தெரிவிக்குமாறு பொது மக்களுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். அதன்படி திமுகவினர் கருப்பு சட்டை அணிந்து பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் பிரதமர் மோடிக்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கருப்பு பலூன்களை பறக்கவிட்டனர். போலீஸாருக்கு தெரியாமல் மறைத்து வைத்த பலூன்களை அவர்கள் கொண்டு வந்தனர்.
கருப்பு பலூன்களை அவர்கள் பறக்கவிடத் தொடங்கியதும் போலீஸார் உஷாராகினர். பின்னர் போராட்டக்காரர்கள் பறக்கவிட கொண்டு வந்த கருப்பு பலூன்களை போலீசார் ஊசி வைத்து உடைத்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.