சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக நடிகர் மன்சூர் அலிகான், சீமான், தமீமுன் அன்சாரி, தனியரசு கைது….!
நடிகர் மன்சூர்அலிகான் உட்பட 18 பேர் சென்னை பல்லாவரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக சிறையில் அடைக்கப்பட்டனர். பிரதமர் மோடி வருகையை கண்டித்து நேற்று கறுப்புக்கொடி காட்டிய சீமான், எம்.எல்.ஏக்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் கைது செய்யப்பட்டு பல்லாவரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களை நேரில் சந்திக்கச் சென்ற நடிகர் மன்சூர் அலிகான், மனித நேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் ஹாரூன் ரஷீத் ஆகியோருக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதனால், அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களை ஆதம்பாக்கத்தில் உள்ள நீதிபதி காரல்மார்க்ஸ் இல்லத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். மன்சூர் அலிகான் உள்பட 18 பேரையும் வரும் 25ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தவிட்டதை அடுத்து, அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக, மன்சூர் அலிகான் உள்ளிட்ட 18 பேரை விடுவிக்கக் கோரி தமீமுன் அன்சாரி உடன் 10க்கும் மேற்பட்டோர் பள்ளிக்கரணை மேம்பாலம் அருகே மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்த போலீசார், அதிகாலையில் விடுவித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.