சென்னையில் போகி பண்டிகை கொண்டாட்டம் பனியோடு புகைசூழ்ந்தது…!!
பொங்கல் விழாவின் தொடக்கமான போகி பண்டிகையையொட்டி, அதிகாலையிலேயே எழுந்து மக்கள் தங்கள் வீட்டில்உள்ள பழைய பொருட்களை கொளுத்தி கொண்டாடி வருகின்றனர். இதனால் சென்னையில் பனியோடு புகைசூழ்ந்து காணப்படுகிறது. சாலைகளில் வாகனங்கள் செல்வதுகூட தெரியாத அளவுக்கு புகை சூழ்ந்துள்ளது