சென்னையில் நான்காவது நாளாக நீடிக்கும் கண்டெய்னர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம்!
நான்காவது நாளாக , சென்னை துறைமுகத்துக்குச் செல்லும் கண்டெய்னர் லாரிகளின் வேலை நிறுத்தம் நீடித்து வருகிறது. வாடகை உயர்வு உள்ளிட்ட கண்டெய்னர் லாரி உரிமையாளர்களின் மூன்றம்ச கோரிக்கைகள் சில மாற்றங்களுடன் CFS நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இதனையடுத்து கடந்த மாதம் நடைபெற்ற கண்டெய்னர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது. இந்நிலையில் ஒரு மாத காலமாகியும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி அவர்கள் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நான்காவது நாளாக நீடிக்கும் கண்டெய்னர் லாரி உரிமையாளர்களின் இந்த வேலை நிறுத்தத்தால் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஏராமான லாரிகள் நீண்ட வரிசையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி பாதிக்கப்பட்டு 300 கோடி ருபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.