சென்னையில் உள்ள சுற்றுலா இடங்கள்..!
தமிழ்நாடு வேகமாக வளர்ச்சியடைந்து வரும் தென்னிந்திய மாநிலமாகும். நீண்ட வரலாற்றையும் தனித்துவ பண்பாட்டையும் அழகிய நிலப்பகுதிகளையும் தமிழ்நாடு கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறை இந்தியாவில் இரண்டாம் நிலையில் இருக்கிறது.
பண்டைத் தமிழர் தமிழ்நாட்டின் இட அழகை முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என வகுத்து விபரித்தனர். அதாவது தமிழ்நாடு காடு, மலை, பாலை, வயல், கடல் ஆகிய இயற்கை அழகைக் கொண்டது. எழில் கொஞ்சும் நீலகிரி மற்றும் கோடைக்கானல் மலைப் பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய அடர்ந்த வனப் பகுதிகள், கிழக்கு கடற்கரை பகுதிகள் போன்ற மனம் கவரும் பல இடங்கள் உண்டு. இப்பொது சென்னையில் உள்ள சுற்றுலா இடங்களைப்பற்றி காண்போம்.
சென்னை :
-
- கடற்கரை
- அண்ணாநகர் கோபுரம்
- பிர்லா கோளரங்கம்
- அமீர் மகால்
- கன்னிமாரா பொது நூலகம்
- புனித ஜார்ஜ் கோட்டை
- கோட்டை கொடிமரம்
- உயர் நீதிமன்றம்
- சென்னைப் பல்கலைக் கழகம்
- கலா சேத்ரா
- கலங்கரை விளக்கம்
- போர் வெற்றி நினைவுச் சின்னம்
- நேப்பியர் பாலம்
- வட்டார இருப்புப்பாதை காட்சி சாலை
- ராஜாஜி மண்டபம்
- ரிப்பன் மாளிகை
- பிரம்மஞான சபை
- சுற்றுலாத் துறை வளாகம்
- டைடல் பூங்கா
- நினைவிடங்கள்
- கிண்டி சிறுவர் பூங்கா
- பாம்புப் பண்ணை
- அரசு கவின் கலைக்கல்லூரி
- லலித்கலா அகாடெமி
- அருங்காட்சியகம்
- தேசிய கலைக் கூடம்
- கோவில்கள்
- தேவாலயங்கள்
- மசூதிகள்
- புத்த விஹார்
- குருத்வாரா
- தர்கா
- மகான் சாந்திநாத் சமணக் கோயில்
- ஜெயின் மந்திர்
- கோ கார்டிங்
- திறந்தவெளி திரையரங்கம்
- கோயம்பேடு பிளானட்யும்
- குதிரை சவாரி
அலைபுரளும் கடலோரம் அமைந்த சிங்கார நகரம் சென்னை, ஒரு காலத்தில் ஜட்கா வண்டிகள் ஓடிக் கொண்டிருந்தன. கூவம் நதியில் படகு சவாரி, ஏரிக்கரைகளில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆங்கிலேய துரைமார்களின் ஆசைக்குரிய பட்டணமாக இருந்தது சென்னை. இன்று வாய்ப்புகளின் வசீகர நகரமாக மாறியிருக்கிறது. ஃபோர்டு, ஹூண்டாய், லேன்சர் வெளிநாட்டு சொகுசு கார்களின் உற்பத்தி நகரமாக உருவெடுத்திருக்கிறது கலைகளின் தாயகமான தமிழகத்தின் தலைநகரம். ஓவியம், சிற்பம், இசை, நாட்டியம் , கட்டடக்கலை, பழமை மாறாத நவீன நகரம் சென்னை. திராவிட நாகரிகத்தின் கருவறை, புதுமையின் காற்று வீசினாலும் சென்னையில் இன்றும்கூட புராதனம் புழக்கத்தில் இருக்கிறது. இன்று அது தகவல் தொழில்நுட்ப மாநகராகவும் உயர்ந்து நிற்கிறது.