திமுக தலைவர் கருணாநிதி பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கருப்பு உடையணிந்து போராட்டத்தில் பங்கெடுத்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழகத்தில் ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) சென்னையில் நடைபெறும் ராணுவ கண்காட்சியை துவக்க விழா, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் வைர விழா ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார்.