குட்கா விவகாரம்:டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்ட திமுகவினர் கைது!
நேற்று சென்னை உயர்நீதிமன்றம் குட்கா வழக்கில் ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கியது, அதன்படி ”குட்கா வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது”.
இந்த வழக்கில் கூட்டரம் சாற்றப்பட்ட அமைச்சர் விஜய பாஸ்கர், டிஜிபி ராஜேந்திரனை பதவி விலக கோரி நேற்றே முக ஸ்டாலின் குரல் கொடுத்தார். பதவி விலகவில்லை எனில் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தார்.
இந்நிலையில், இன்று காலை திமுகவினர் போராட்டம் நடத்தப்போவதாக தகவல் கிடைத்தது அடுத்து, சென்னை மெரினா கடற்கரை, டிஜிபி அலுவகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கபடுத்தப்பட்டது.
தகவல் கிடைத்தது போலவே திமுகவினர் 200 க்கும் மேற்பட்டவர்கள் திடீரயென போராட்டத்தில் குதித்தனர். டிஜிபி ராஜேந்திரனை பதவி விலக சொல்லி திமுகவினர் டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை கலைந்துபோகும்படி போலிசார் அறிவுறுத்தனர். கலைந்து செல்ல மறுக்கவே, போலீசார் தற்போது அவர்களை கைது செய்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.