காவிரி விவகாரத்தைவிட மெரினாதான் தமிழக அரசுக்கு முக்கியமா?போராட்டத்தை தடுக்க அரசுக்கு அதிகாரமில்லை! சென்னை உயர்நீதிமன்றம்
காவிரி விவகாரத்தைவிட மெரினாதான் தமிழக அரசுக்கு முக்கியமா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதற்கு முன் காவிரி பிரச்னை, விவசாயிகள் பிரச்சனைக்காக தொடர்ந்து போராடி வருபவர் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு. இவர் டெல்லியில் 40 நாட்கள் நடத்திய போராட்டம் வித்தியாசமானது. இப்போது சென்னை மெரினா கடற்கரையில் 90 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதியளிக்கும்படி போலீசாரிடம் மனு அளித்துள்ளார். இதற்கு போலீசார் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து அய்யாகண்ணு கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை மெரினா கடற்கரையில் 90 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதியளிக்கும்படி காவல் துறையினருக்கு உத்தரவிடக் கோரி’ மனுத்தாக்கல் செய்தார்.
இந்நிலையில், காவிரி விவகாரத்தைவிட மெரினாதான் தமிழக அரசுக்கு முக்கியமா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
போராட்டத்தை ஒழுங்கு படுத்த மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளது, போராட்டத்தை தடுக்க அதிகாரமில்லை என்றும் மெரினாவில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரும் அய்யாக்கண்ணு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.