பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உலக அளவில் ட்விட்டரில் முதலிடம் பிடித்து # GoBackModi ஹேஷ் டாக் ட்ரெண்டாகியது.இந்த ட்ரேண்டிங் நடந்த வேளையில் பிரதமர் நரேந்திர மோடி இதை பார்வையிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் பிரதமர் நரேந்திர மோடி காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில், ராணுவ தளவாட கண்காட்சியை முறைப்படி தொடங்கிவைத்த நிலையில் , தமிழகத்தில் பாதுகாப்புத்துறை தொழில்பூங்கா அமைக்கப்படும் என உறுதியளித்தார்.
டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை, ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர் அவர் ஹெலிகாப்டர் மூலம் திருவிடந்தைக்கு சென்றார். அங்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில், ராணுவ தளவாட கண்காட்சியை பிரதமர் முறைப்படி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, காலை வணக்கம் என்று கூறி உரையைத் தொடங்கினார். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக கடல்கடந்த வர்த்தகத்தில் சிறந்து விளங்கிய தமிழகம் சோழர்களால் பெருமை பெற்ற மண் என்றார். வேத காலத்திலிருந்தே அகிம்சையையும், உலக சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் நாடு இந்தியா எனவும் அவர் குறிப்பிட்டார்.
அமைதிக்கு அளிக்கப்படும் அதே அளவு முக்கியத்துவம், நாட்டு மக்களை காப்பதற்கும் அளிக்கப்படுகிறது எனவும் பிரதமர் கூறினார். தமிழ்நாட்டிலும், உத்தரப்பிரதேசத்திலும் பாதுகாப்புத்துறை தொழில் பூங்கா அமைக்க உறுதிபூண்டுள்ளதாகக் கூறிய மோடி, இவை பொருளாதார வளர்ச்சிக்கும், பாதுகாப்புத்துறை உற்பத்திக்கும் எஞ்சின்போல அமையும் என்றார். அனைவரும் கனவு காண வேண்டும் என அப்துல் கலாம் கூறியதை சுட்டிக்காட்டிய பிரதமர், கனவு, சிந்தனையாகவும், சிந்தனை செயலாகவும் மாற வேண்டும் என்றார்.
இதற்கு முன்னர் இருந்த மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட கொள்கை முடக்கத்தால் ராணுவ ஆயத்த நிலை பாதிப்புக்கு உள்ளானதாகவும், பாஜக அரசு அதை மாற்றியிருப்பதாகவும் மோடி பெருமிதம் தெரிவித்தார். தமது உரையை முடிப்பதற்கு முன்னர் தொட்டனைத்தூறும் மணற்கேணி என்ற திருக்குறளை பிரதமர் மோடி மேற்கோள் காட்டினார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ராணுவ தளவாட கண்காட்சியை முறைப்படி தொடங்கிவைத்த பின் அவர் கண்காட்சியை முறைப்படி பார்வையிட்டார்.அவருக்கு அங்குள்ள அதிகாரிகள் தளவாடங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உலக அளவில் ட்விட்டரில் முதலிடம் பிடித்து # GoBackModi ஹேஷ் டாக் ட்ரெண்டாகியது.இந்த ட்ரேண்டிங் நடந்த வேளையில் பிரதமர் நரேந்திர மோடி இதை பார்வையிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…