ஐ.பி.எல். போட்டிக்கு எதிரான போராட்டத்தின் போது, காவலரை தாக்கியதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது …!
நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவரை ஐ.பி.எல். போட்டிக்கு எதிரான போராட்டத்தின் போது, காவலரை தாக்கியதாக,போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில், கடந்த 10 ஆம் தேதி பல்வேறு கட்சியினர் நடத்திய போராட்டத்தில், காவலர் ஒருவர் தாக்கப்பட்டார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய மயிலாப்பூர் போலீசார், போராட்டத்தின் போது கிடைத்த வீடியோ பதிவுகளை கொண்டு, நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் பொறுப்பாளர் ஆல்பர்ட் ஸ்டாலின் என்பவரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.