எண்ணூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 யானை தந்தங்கள் பறிமுதல்…
சென்னை அருகே எண்ணூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு ஜோடி யானை தந்தங்களை பூந்தமல்லி போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை அருகே பூந்தமல்லியில், நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு பேரை விசாரித்ததில், அவர்கள் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவர்களது செல்போனில் 2 யானை தந்தங்களின் புகைப்படங்கள் இருந்ததை அடுத்து, அது குறித்து விசாரணை நடத்தினர். இந்த புகைப்படத்தை பிரவின்குமார் அனுப்பியதாகவும், எண்ணூரைச் சேர்ந்த சின்ராஜிடம் யானை தந்தங்கள் உள்ளதாகவும் போலீசாருக்கு தெரியவந்தது. பின்னர் சின்ராஜ் வீட்டுக்கு சென்ற போலீசார், சின்ராஜை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்