சென்னை உயர்நீதிமன்றத்தில்,உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிடுவோரது உடல்தகுதி பற்றிய விவரங்கள் வேட்பு மனுவில் தெரிவிக்கப்படுவதில்லை என்றும், இதனால் தேவையற்ற இடைத்தேர்தல்களைச் சந்திக்க நேரிடுவதாகவும் பொள்ளாச்சி ஆனைமலையைச் சேர்ந்த சுப்பையா என்பவர் முறையிட்டிருந்தார்.
இதனால், வேட்பாளர்களின் உடல் தகுதி பற்றிய மருத்துவ அறிக்கையை வேட்புமனுவுடன் இணைக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், மத்திய அரசையும், தேர்தல் ஆணையத்தையும் எதிர் மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த மனு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமெரிக்காவில் அதிபர் உள்ளிட்ட உயர்பதவிகளை ஒருவர் இரண்டு முறைக்குமேல் வகிக்க முடியாத வகையில் கட்டுப்பாடுகள் உள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவில் அதுபோல் ஏன் இல்லை என்று கேட்ட அவர், அத்தகைய விதிமுறைகளை இங்கும் ஏன் உருவாக்கக் கூடாது எனவும் கேள்வி எழுப்பினார். இந்த விவகாரங்கள் குறித்து பதிலளிக்க மத்திய அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதை அடுத்து வழக்கு விசாரணையை வரும் 13 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். இந்த வழக்கில் மத்திய, மாநில சட்ட ஆணையங்களையும் எதிர்மனுதாரர்களாக சேர்க்க நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…