அழகழகாக ஜொலிக்கும் திமுக முன்னால் தலைவர் கருணாநிதி சமாதி…!!
திமுகவின் முன்னாளல் தலைவர் கருணாநிதி சமாதி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ளது.இச்சமாதியில் நேற்று முன்தினம் 7 அடி உயரத்தில் பேனாவும், 6 அடி அகலத்தில் கருப்பு கண்ணாடியும் வைக்கப்பட்டிருந்தது. அதில் கருணாநிதி குறிப்பிட்ட வாசகமும் இடம் பெற்றிருந்தது. இது தி.மு.க. தொண்டர்களையும், கருணாநிதி சமாதிக்கு அஞ்சலி செலுத்த வந்த பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்தது.
இந்தநிலையில் நேற்று அந்த அலங்காரம் அகற்றப்பட்டு சூரியகாந்தி பூக்கள் மூலம் புதிய அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
தி.மு.க. பொதுக்குழுவில் தான் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பதில் இருந்து கருணாநிதி சமாதியில். ஒரு நாள் வைக்கப்படும் அலங்காரம் மறுநாள் காலை 7 மணிக்கு அகற்றப்பட்டு, புதிய அலங்காரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது மு.க.ஸ்டாலின் ஏற்பாட்டில் நடைபெறுகின்றன என்றும் இப்பணிகளை மேற்பார்வையிடுவதற்காக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மாவட்டசெயலாளர்கள் பி.கே.சேகர்பாபு, ஜெ.அன்பழகன், சேப்பாக்கம் பகுதி செயலாளர் எஸ்.மதன்மோகன் ஆகியோரை மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார் என்றும் அவர்களின் மேற்பார்வையிலேயே தினமும் இந்த அலங்கார பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அது மட்டுமில்லாமல் கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்காக தினமும் ஏராளமான தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் உணவு தி.மு.க. சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.அதற்கும் அது சம்மந்தமான பொறுப்பாளர்களை ஸ்டாலின் நியமித்துள்ளார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்….
DINASUVADU