தேர்வில் தோல்வி அடைந்தால் செய்ய வேண்டியவை மாவட்ட ஆட்சியர் அறிவுரை..,
அரியலூர் மாவட்டம் லிங்கத்தடி மேடு வள்ளலார் பள்ளியில் நவம்பர் 14 அன்று குழந்தைகள் தின விழா நடைபெற்றது. அதில் அரியலூர் மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தால் மனம் தளர விடகூடாது. டெண்டுல்கர் 10ம் வகுப்பு தான் முடித்துள்ளார், இந்திய அணியின் முன்னால் கேப்டன் டோனி யும் அதுபோல தான் ஆனால் அவர்கள் வாழ்கையில் உயர்ந்த நிலையில் உள்ளனர். அதுபோல மாணவர்கள் தங்களது தன்னம்பிகை தளர விடாமல் வாழ்கையில் மேம்பாடு அடைய வேண்டும் என்று அவரது உரையை நிறைவு செய்தார்.