விமர்சிப்பவர்களுக்கு அதற்கான அருகதை இருக்க வேண்டும் என அரியலூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் முதலமைச்சர் பேச்சு. அரியலூர் அருகே கொல்லாபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், பெரம்பலூரை சேர்ந்த 36,691 பயனாளிகளுக்கு ரூ.78 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ரூ.32.94 கோடி மதிப்பீட்டில் 57 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கலும் நாட்டினார். ரூ.252 கோடி மதிப்பீட்டில் 74 முடிவுற்ற திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. […]
அரியலூர் மாவட்டம் கீழமாளிகை எனும் கிராமத்தை சேர்ந்தவர் 23 வயது இளைஞரான சக்திவேல். இந்த இளைஞன் கஞ்சா போதையில் அப்பகுதி கோவிலில் உள்ள பொருட்களை நாசப்படுத்தியுள்ளார். சிறுகளத்தூர் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலில் புகுந்த சக்திவேல் அங்குள்ள சக்கரம், தேர் கட்ட உபயோகப்படுத்தப்பட்ட பொருட்கள், கோவிலில் உள்ள சாமி சிலைகள் ஆகியவற்றை தீ வைத்து கொளுத்தியுள்ளார். மேலும், அங்குள்ள கேமராக்கள், மற்றும் மின் சாதன பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சக்திவேலை சுற்றி […]
அரியலூரில் 26-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்தில் ஆடி திருவாதிரையான வரும் 26-ஆம் தேதி மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் கொண்டாடப்படுவதையொட்டி அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி அறிவித்துள்ளார்.
நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், அரியலூரை சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை. நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், அரியலூரை சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 430 மதிப்பெண்கள் எடுத்து நீட் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்த மாணவி, தோல்வி பயத்தில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு […]
அரியலூர் அருகே மரத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு. அரியலூர் அருகே மரத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். கணவன், மனைவி, மாமியார், பேத்தி என நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், இந்த விபத்தில் ஒரு பெண் மட்டும் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக போலீசார் […]
அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு 8 வயது சிறுமியை கடத்தி சென்று முத்தம் தந்த இளைஞருக்கு 17 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது. பைக்கில் கடத்தி சென்று சிறுமிக்கு முத்தம் தந்த மாரிமுத்து என்ற இளைஞருக்கு ரூ.20,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அரியலூர் மகிளா நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரியலூரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தமிழ் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அரியலூர் மாவட்டம் காட்டுப்பிரிங்கியம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் அருள்செல்வன்(35) என்பவர் தமிழாசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று அப்பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவிக்கு அருள்செல்வன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து தலைமையாசிரியை ராஜேஸ்வரியிடம் மாணவி புகார் தெரிவித்தார். மாணவி, தமிழாசிரியரை அழைத்து பேசிய தலைமையாசிரியர் இதை பெரிதுப்படுத்த வேண்டாம் என கூறியுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரியவர இன்று பள்ளியில் […]
அரியலூரில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த தந்தை மற்றும் அவரை காப்பாற்ற முயன்ற மகன் இருவரும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் எனும் பகுதியை சேர்ந்த 47 வயதுடைய முத்துசாமி என்பவர் தனது வீட்டை சுற்றியுள்ள பகுதியில் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பலத்த காற்றுடன் மழை பெய்த நேரம், வீட்டின் அருகே இருந்த முருங்கை மரம் முறிந்து மின்கம்பி மீது விழுந்ததால் மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. முத்துசாமி இதனை கவனிக்காமல் மின்கம்பி […]
அரியலூரில் நடத்தப்பட்ட தொல்லியல் அகழாய்வில் ராஜேந்திர சோழன் அரண்மனை செங்கல் சுவர் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தமிழக தொல்லியல்துறை சார்பில் கங்கைகொண்ட சோழபுரம் மாளிகை மேட்டில் தொல்லியல் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் இந்த பகுதியில் நடைபெற்று வரும் இந்த ஆய்வில், 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்பு ஆணிகள், கூரை ஓடுகள், மண் பானை ஓடுகள், சிவப்பு நிற பானை ஓடுகள், கண்ணாடி வளையல் மற்றும் அரண்மனையிருந்ததற்கான […]
காலாவதி சுண்ணாம்பு சுரங்கம் மியாவாக்கி காடாக்கப்படும் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். பெரியார் நகரில் 7 ஆயிரம் மரக்கன்று நடும் திட்டத்தை தொடக்கி வைத்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அரியலூர் மாவட்டத்தில் காலாவதியான சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை மியாவாக்கி முறையில் குறுங்காடாகப்படும். சுண்ணாம்புக்கல் வெட்டி முடிக்கப்பட்ட 1,000 சுரங்கத்தை மியாவாக்கி காடாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மூன்று சிறுவர்கள் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே 4 வயது சிறுமிக்கு மூன்று சிறுவர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரை தொடர்ந்து ஒன்பது வயது சிறுவன் ஒருவர் மற்றும் ஏழு வயதான இரண்டு சிறுவர்கள் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விளையாடிக் கொண்டிருக்கும்போது மூன்று சிறுவர்களும் சேர்ந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் […]
நாளை அரியலூர் மாவட்டத்தில் முழுமுடக்கம் கிடையாது என மாவட்ட ஆட்சியர் ரத்னா தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு அறிவித்த ஊரடங்கை அனைத்து மாநிலமும் தீவிரமாக கடைபிடித்து வருகிறது. மத்திய அரசு மே 3-ம் தேதிக்கு பிறகு தளர்வுகள் அறிவித்தது. இதைத்தொடந்து தமிழக அரசும் சில தளர்வுகளை அறிவித்தது. அதன்படி காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க வாரந்தோறும் […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், ஒவ்வொரு நாட்டு அரசும் இதனை கட்டுப்படுத்த மிக தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அரியலூரை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் கிட்டத்தட்ட 28 நாட்கள் சிகிச்சைக்கு பெற்று வந்தார். தற்போது இவர் பரிபூரண குணமடைந்ததாக மருத்துவர் குழு தெரிவித்துள்ள நிலையில், அவரை உற்சாகப்படுத்தும் விதமாக மருத்துவர்கள் கைகளை தட்டி வழியனுப்பி வைத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி கிராமத்தில் நைனார் ஏரி உள்ளது .இந்த ஏரி சுமார் 64 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியின் கரை தான் மயான கோட்டைக்கு செல்லும் வழியாக உள்ளது. இந்த ஏரியில் தண்ணீர் நிறைந்தால் இறந்தவர்களை மயான கொட்டகைக்கு கொண்டு செல்ல கழுத்தளவு தண்ணீரில் சுமந்து செல்கின்றன. நேற்று முன்தினம் கோசலம் என்ற மூதாட்டி ஒரு உடல்நிலை சரியில்லாமல் இறந்துள்ளார். அவரது உடலை மயான கொட்டகைக்கு எடுத்து சென்றபோது நைனார் ஏரியில் […]
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள திருகளப்பூர் கிராமத்தை சார்ந்தவர் மணிகண்டன் இவரது தங்கை மகள் கலைவாணி (2) பெரியகருக்கையில் உள்ள ஒரு தனியார் மழலையர் பள்ளியில் படித்து வருகிறார். கலைவாணி வேனில் பள்ளிக்கு சென்று மீண்டும் அதே வேனில் திரும்புவது வழக்கம். இந்நிலையில் இன்றும் வழக்கம் போல கலைவாணியை பள்ளிக்கு அழைத்து செல்ல அவரின் வீட்டு அருகில் பள்ளி வேன் வந்தது. அப்போது மணிகண்டனின் மகன் ராகுல் (2) வேன் அருகில் ஓடியுள்ளார்.எதிர்பாராதவிதமாக ராகுல் வேனின் […]
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். மெக்கானிக் வேலை பார்த்து வரும் இவருக்கு கீதா என்ற மனைவியும், கீர்த்தனா என்ற மகளும் உள்ளனர். இவர் தனது மனைவி கீதாவுடன் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்பொழுது அவருக்கு டீ வாங்குவதற்காக அவரது மனைவி கீதா வெளியில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். திரும்பி வந்ததும், அவரது கணவர் மணிகண்டனை காணவில்லை. மருத்துவமனையைச் சுற்றி கீதா மணிகண்டனை தேடி வந்தார். அப்பொழுது […]
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இறவாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு கீர்த்தனா என்ற மகளும் உள்ளார். மணிகண்டன் மோட்டார் பழுது பார்க்கும் தொழிலை செய்து வருகிறார்.இந்நிலையில் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மணிகண்டன் மனைவி கீதாவுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கீதா டீ வாங்க சென்றுள்ளார். அந்த நேரத்தில் திடீரென மணிகண்டன் மாயமானார். ரொம்ப நேரமாக கீதா தேடியும் அவரை காணவில்லை பின்னர் மருத்துவ மனையில் வேலை […]
தமிழ்நாடு தமிழக காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் 228 மையங்களில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த காலிப் பணியிடங்களுக்கு மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். தேர்வில் வெற்றி பெறும் நபர்களுக்கு , உடல் தேர்வு நடத்தப்படும். எழுத்துத்தேர்வு 80 மதிப்பெண்களுக்கும் , உடல்தகுதி தேர்வு 15 மதிப்பெண்களுக்கும் வழங்கப்படும். என்சிசி மற்றும் விளையாட்டுகளுக்கு சான்றிதழ் அடிப்படையில் 5 மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் […]