நியூசிலாந்து வீரர்கள் கண்ணீர் விட்டு அழுதனர் ! – இன்சமாம் உல் ஹக்

 2002-ல் நியூசிலாந்து அணி  பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அப்போது நியூசிலாந்து அணி இரண்டாவது டெஸ்ட் போட்டிகாக கராச்சியில் உள்ள  ஹோட்டலில் தங்கியிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென கராச்சியில் குண்டு வெடிப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து பேசிய இன்சமாம்-உல்-ஹக் ” 2வது டெஸ்ட் போட்டிக்காக நாங்கள் அனைவரும் ஹோட்டலில் தங்கியிருந்தோம். அப்போது திடீரென கராச்சியில் குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இந்த குண்டு வெடிப்பில் வீரர்கள்  யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நான் எனது அறையிலிருந்து கிழே இறங்கி செல்லும் போது நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் கண்ணீருடன் இருந்தார்கள். நியூசிலாந்து வீரர்கள் உடனடியாக டெஸ்ட் போட்டியை ரத்து செய்து விட்டு சொந்த ஊருக்கு சென்றனர்.” என்று கூறியுள்ளார். 
author avatar
Vidhusan