பட்டம் இனிமே உங்களுக்கு இல்ல! நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவுக்கு வந்த சோதனை!

பட்டம் இனிமே உங்களுக்கு இல்ல! நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவுக்கு வந்த சோதனை!

rashmika sad

ரசிகர்களால் அன்புடன் நேஷனல் கிரஷ் என்று அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது புஷ்பா 2 திரைப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்த அனிமல் திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தில் பாபி தியோல், திரிப்தி டிம்ரி, அனில் கபூர், சவுரப் சுக்லா உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். படத்தில் நடித்த எல்லா பிரபலன்களுடைய கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக நடிகை திரிப்தி டிம்ரி நடித்த கதாபாத்திரம் ராஷ்மிகா நடித்த கதாபாத்திரத்தை விட பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

படத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்றது போல திரிப்தி டிம்ரி நடித்திருந்தார். அவரைப்போல ராஷ்மிகாவும் அற்புதமாக நடித்திருந்தாலும் அவரைவிடதிரிப்தி டிம்ரி நடித்த கதாபாத்திரம் இளைஞர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. பலரும் படத்தில் அவர் நடித்த காட்சிகளை வெளியீட்டு ரன்பீர் கபூருக்கு திரிப்தி டிம்ரிக்கும் கெமிஸ்டிரி நன்றாக இருப்பதாக கூறி வருகிறார்கள்.

ரூ.500 கோடியை நெருங்கிய ‘அனிமல்’ திரைப்படம்.! பாலிவுட்டை கலக்கும் ரன்பீர் கபூர்.!.

மேலும் சிலர் இனிமேல் நேஷனல் க்ரஷ் பட்டம் உங்களுடையது இல்லை அந்த பட்டம் திரிப்தி டிம்ரிக்கு தான் செட் ஆகும் எனவும் கூறி வருகிறார்கள். அனிமல் படத்தில் அவருடைய கதாபாத்திரத்தை பார்த்து மயங்கி போன இளைஞர்கள் புதிய நேஷனல் க்ரஷ் திரிப்தி டிம்ரி தான் என கூறி வருகிறார்கள். இதனை பார்த்த நெட்டிசன்கள் இது என்னங்க நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவுக்கு வந்த சோதனை? என கலாய்த்து வருகிறார்கள்.

மேலும், அனிமல் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஆகிய மொழிகளில் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.  படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் படத்தின் வசூலும் அதிகரித்து வருகிறது. இந்த திரைப்படம் 4 நாளில் உலக முழுவதும் ரூ.425 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

New National Crush
New National Crush [file image]
Join our channel google news Youtube