கோடை வெயிலில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க வேண்டுமா? அப்போ இந்த உணவுகளை சாப்பிடுங்கள்…!!

கோடை வெயில் காலத்தில் வெளியே பயணம் செய்வதால்  சூரிய ஒளி மற்றும் வியர்வை உங்கள் சருமத்தை அதிக அளவு பாதிக்கிறது. உங்கள் சருமத்தை கவனித்துக்கொள்வது என்பது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்று. சருமம் பாதிக்கப்பட்டால் அதனை இயற்கையான சிகிச்சைகள் மூலம், நாம் வீட்டில் சில உணவுகளை செய்து சாப்பிடுவதன் மூலம் சரிப்படுத்தி கொள்ளலாம்.

இது தெரியாமல் சிலர் ஃபேஸ் பேக்குகள் மற்றும் சில க்ரீம்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், இது நம்முடைய சருமத்தை மேலும் சில அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே, நாம் வீட்டில் சில உணவுகளை செய்து சாப்பிட்டாலே போதும் சருமம் பாதிக்கப்படாமல் ஆரோக்கியமாக இருக்கலாம். அவரை என்னென்ன உணவு என்பதை பற்றி பார்க்கலாம்.

1.புதினா சட்னி

Pudina
Pudina Image source wallpaperflare

புதினா இல்லை என்பது பல இடங்களில் எளிதாக கிடைக்கும் ஒன்று. இது கோடை காலத்தில் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. ஏனென்றால்,  நம் உடலை அதிக வெப்பத்திலிருந்து புதினா பாதுகாக்கிறது. இது செரிமான அமைப்பை சீராக இயங்க வைக்கிறது, இது முகப்பருவிலிருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. நீங்கள் புதினா சட்னி செய்து குளிர்சாதன பெட்டியில் ஒரு கண்ணாடி ஜாடியில் சேமித்து வைக்கலாம், மேலும் அது 10 நாட்கள் வரை புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

2.பச்சை மிளகாய்

Green Chillies
Green Chillies Image source wallpaperflare

வெயில் நேரத்தில் மிளகாயா..? என்று நீங்கள் சற்று அதிர்ச்சியாவது எங்களுக்கு புரிகிறது. இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், உண்மை என்னவென்றால், பச்சை மிளகாய்வை சாப்பிடுவதன் மூலம் உடலில் வெப்பம் ஏற்படாது. இது உங்களுடைய வெப்பத்தை குளிவிக்க உதவுகிறது. எனவே, உங்கள் உணவில் பச்சை மிளகாய் சேர்ப்பது மிகவும் நல்லது.

3.தேன் நெல்லிக்காய் 

Honey gooseberry
Honey gooseberry Image source foodspot

தேனில் ஊறவைத்த நெல்லிக்காய்வை சாப்பிடுவதன் மூலம் உடலில் இருக்கும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியை கொடுக்கிறது. தேன் நெல்லிக்காய் சாப்பிட பிடிக்காதவர்கள் யாருமே இருக்கமுடியாது என்றே கூறலாம். ஏனென்றால், இது அந்த அளவிற்கு சுவையானதாக இருக்கும். இதனை கோடை காலத்தில் காலையில் வெறும் வயிற்றில் 2 சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. அதுபோல சருமம் அழகாக மேன்மையாகும்

4. தர்பூசணிகள்

Watermelon
Watermelon<br >Image source wallpaperflare

கோடை காலம் தொடங்கிவிட்டால் போதும் மக்கள் பலரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று தர்பூசணிகள் தான். இது சருமத்தையும் ஈரப்பதமாக்குவதில் சிறந்தது. இதில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் நமது சருமத்தை மிருதுவாக வைத்திருக்க ஈரப்பதத்தை அளிக்கிறது. கோடையில் பளபளப்பான சருமத்தைப் பெற தர்பூசணி விதைகளையும் தாராளமாக உட்கொள்ளலாம்.

5.குல்கந்து பால் 

gulkand milk
gulkand milk Image source file image

கோடைகாலத்தில் உங்கள் குடல், தோல் மற்றும் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க குல்கந்து நம்பமுடியாத அளவிற்கு  குளிர்ச்சி தன்மையை கொடுக்கிறது.  குல்கந்து என்றால் உட்கொள்ள கூடிய ரோஜா இதழ்களை பதம் ஆக்கி அதனை ஜாம் செய்து வைத்திருப்பது தான். இந்த குல்கந்து -ஐ பாலில் சேர்த்து குடிப்பது வெயில் காலத்தில் உங்கள் சருமங்களை பாதுகாக்க உதவுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.