#NEDvAFG: அரையிறுதி ரேஸில் நீடிக்குமா ஆப்கானிஸ்தான்? நெதர்லாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

NEDvAFG: 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. மொத்தம் 45 லீக் போட்டிகளில் இதுவரை 33 முடிந்த நிலையில், இன்று 34-ஆவது லீக் போட்டியில் ஹஸ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும், ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது.

லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியதில் இப்போட்டி நடைபெறுகிறது. ஆப்கானிஸ்தான் அணி இதுவரை விளையாடி உள்ள 6 ஆட்டங்களில் தலா 3 வெற்றி, 3 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. இதில் குறிப்பாக நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை என பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி இந்த உலகக்கோப்பையில் கவனத்தையும் பெற்றுள்ளது.

கடந்த 2 போட்டிகளில் அந்த அணி சேஸிங் செய்து வென்றிருப்பது, அந்த அணியின் பெரும் முன்னேற்றம் கொண்ட மனநிலையை காட்டுகிறது. இதனால் ஆப்கானிஸ்தான் அணிக்கு இது மிகச் சிறந்த உலகக் கோப்பையாக மாறிக்கொண்டிருக்கிறது. கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாகிதி, அஸ்மதுல்லாஓமர்ஸாய், ரஹ்மத் ஷா, ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஸத்ரன் ஆகியோர் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கக் கூடியவர்களாக திகழ்கின்றனர். ஆல்-ரவுண்டராக அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், ரஷீத்கான் ஜொலிக்கின்றனர்.

உலகக்கோப்பை வரலாற்றில் புதிய சாதனை படைத்த ஷமி…

எனவே, ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய பொடியை சேர்த்து எஞ்சிய 3 லீக் போட்டிகளிலும்  வெற்றி பெற்றால் ஆப்கானிஸ்தான் முதல்முறையாக அரை இறுதிக்குள் நுழையும். இதுபோன்று, நெதர்லாந்து அணிக்கும் இந்த உலகக்கோப்பை சிறப்பாக அமைந்துள்ளது என்றே கூறலாம். நெதர்லாந்து அணியானது 6 போட்டிகளில் விளையாடி 4 தோல்வி, 2 வெற்றிகளுடன் புள்ளிபட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை ஏறக்குறைய இழந்துவிட்டது.

இருப்பினும், நெதர்லாந்து அணி  சில சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனத்தில் இடம்பிடித்துள்ளது. அந்த அணியில் பேட்டிங்கில் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ், சைபிரான்ட் இங்கில்பிரிட்டும், , பந்து வீச்சில் பால் வான் மீக்ரென், ஆர்யன் தத், வான்டெர் மெர்வும், ஆல்-ரவுண்டர்களாக காலின் அகேர்மான், லோகன் வான் பீக், பாஸ் டி லீட்டும் அணிக்கு வலுசேர்க்கிறார்கள்.

எனவே, சர்வதேச ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 9 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் ஆப்கானிஸ்தான் 7, நெதர்லாந்து 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. உலகக் கோப்பையில் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். இதனால், ஆப்கானிஸ்தான் – நெதர்லாந்து மோதும் இன்றைய போட்டியில் சுவாரஸ்யங்கள் அதிகம் உள்ளது. லக்னோ மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான் (விளையாடும் XI): ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (c), அஸ்மத்துல்லா உமர்சாய், இக்ராம் அலிகில்(w), முகமது நபி, ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, நூர் அகமது ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நெதர்லாந்து (விளையாடும் XI): வெஸ்லி பாரேசி, மேக்ஸ் ஓடோவ்ட், கொலின் அக்கர்மேன், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், ஸ்காட் எட்வர்ட்ஸ்(w/c), பாஸ் டி லீட், சாகிப் சுல்பிகர், லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தட், பால் வான் மீகெரென் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்