அமெரிக்காவில் 70,000 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை!

அமெரிக்காவில் 70,000 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை!

அமெரிக்காவில் 70,000 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை. அச்சத்தில் அமெரிக்க மக்கள். 

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து, 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது தீவிர தாக்குதலை அரங்கேற்றி வருகிறது. இந்த வைரஸை அழிப்பதற்கு உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளது. இருப்பினும் இந்த வைரசை முற்றிலுமாக அழிப்பதற்கு எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. 

இந்நிலையில், இந்த கொரோனா வைரஸால், இதுவரை உலக அளவில், 3,646,103 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 252,407 பேர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். மேலும், உலக அளவில் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா தான். 

அமெரிக்காவில், இந்த வைரஸை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இந்த வைரஸின் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. அந்த வகையில், அமெரிக்காவில் 1,212,835 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று மட்டும் 1,324 பேர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இதனால், அங்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 69,921 ஆக  அதிகரித்துள்ளது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube