வெள்ள நிவாரணத்திலும் பிசினஸ் முக்கியமா? உதவி செய்து சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா!

தற்போது, மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த அதீத கனமழையால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மழைநீர் புகுந்து, புறநகர் முழுக்க வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ள நேரில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அரசு மட்டுமல்லாது, பிரபலங்கள், தன்னார்வலர்களும் களப்பணி ஆற்றி வருகின்றனர்.

அந்த வகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளச்சேரி பகுதி மக்களுக்காக நடிகை நயன்தாரா தரப்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. ஆனால், அது கடைசியில் சர்ச்சையில் போய் முடியும் என அவர் எண்ணி பார்த்திருக்க மாட்டார்.

தற்போது மழை மெல்ல குறைந்தாலும், சென்னை இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் சில நாட்கள் ஆகும் என தெரிகிறது. இந்த நேரத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

மறைந்தும் மனதில் வாழும் மயில்சாமி…நினைவுகூர்ந்த சாலிகிராம மக்கள்.!

அந்த வகையில், நயன்தாரா தனது ஃபெமி 9 என்ற பிராண்ட் மூலம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தண்ணீர், நாப்கின்கள் மற்றும் உணவுகளை வழங்கினார். இதனை பார்த்த ரசிகர்களும், பொதுமக்களும் நயன்தாராவை ஒரு பக்கம் மனதாரப் பாராட்டி வந்தாலும், நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

அதாவது, நயனின் ‘ஃபெமி 9’ நிறுவனத்தின் மூலம் உதவி செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த மாதிரியான சூழ்நிலையில் கூட, அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சொந்த நிறுவனத்திற்கு விளம்பரம் செய்வதா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சமீபத்தில், தனது சொந்த ஸ்கின் கேர் பிராண்டிற்கு “9 ஸ்கின்” தொடங்கிருப்பதாக அறிவித்தார். இந்த நிறுவனத்தை, விக்னேஷ் சிவன், டெய்சி மார்கன் என்பவருடன் இணைந்து அவர் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான நடிகை நயன்தாரா, கடந்த இருபது வருடங்களாக தமிழ், மலையாளம் என பல படங்களில் நடித்து வருகிறார். நயன்தாரா கடைசியாக அன்னபூரணி என்ற படத்தில் நடித்திருந்தார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.