டெல்லியில் நாளை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம்

டெல்லியில் நாளை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம்

Sharad Pawar

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், டெல்லியில் உள்ள சரத்பவார் இல்லத்தில் நாளை பிற்பகல் நடைபெற உள்ளது.

மகாராஷ்டிர அரசியலில் பெரும் திருப்பமாக, எதிர்க்கட்சித்தலைவர் அஜித் பவார் மற்றும் மற்ற தேசியவாத காங்கிரஸ்(என்சிபி) கட்சியின் எம்.எல்.ஏக்கள் சிலர் ஆளும் சிவசேனா மற்றும் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளனர். ஆளுநர் மாளிகையில் அஜித் பவார் மற்றும் 9 என்சிபி எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவியேற்றார். இதுகுறித்து என்சிபி யின் தலைவர் சரத் பவார், எனது கட்சி உடைந்ததாக நான் கூறமாட்டேன், இந்த பிரச்சினை எனக்கு மட்டுமல்ல, மக்களின் பிரச்சினையும் கூட என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், டெல்லியில் உள்ள சரத்பவார் இல்லத்தில் நாளை பிற்பகல் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube