நாளை பூமியை தாக்குகிறதா சூரிய புயல்? நாசா எச்சரிக்கை!

சூரிய புயல் நாளை பூமியை தாக்கலாம் என்று சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. சூரியன் ஒரு விண்மீன் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. விண்மீன்கள் என்பது இரவில் ஒளிரக்கூடியவை. இதில், சிலவகை விண்மீன்கள் அதிக பிரகாசமாகவும், சிலவகை மங்கிய நிலையிலும் கொண்டிருக்கும். இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு என ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர். இதில், பூமிக்கு மிக அருகில் இருக்கும் விண்மீன்தான் சூரியன்.

சூரியனில் இருவகை கூறுகள்:

அதன்படி, சூரியனில் இருவகை கூறுகள் உள்ளன. அதில் ஒன்று லேசான கூறுகள் (soft elements), மற்றொன்று கடினமான கூறுகள். அப்படியிருக்க சூரியிலுள்ள ஒரு ஹைட்ரஜன், மற்றொரு ஹைட்ரஜனுடன் மோதிக்கொள்வதால், சூரியனில் வெப்பசக்தி வெளிப்படுகிறது. இவ்வாறு இரு ஹைட்ரஜன் மூலக்கூறுகளும் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும் போது ஹீலியம் உற்பத்தியாகிறது.

சூரியப்புயல்:

தற்போதைக்கு இந்த செயல் மட்டுமே சூரியனில் நடந்துக்கொண்டிருக்கிறது. இதுபோன்று, சூரியனின் இரு ஹைட்ரஜன் இணைந்து வெடிப்பை ஏற்படுத்தும் செயலுக்கு nuclear fusion என்று பெயர். இந்த சூழலில், சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்ப ஆற்றல் (சூரிய புயல்) 11 வருடத்திற்கு ஒருமுறை அதிக அளவு எனர்ஜியை வெளிப்படுத்துகிறது. இதைத்தான் சூரியப்புயல் என்று அழைக்கிறார்கள்.

சுறுசுறுப்பாக இருக்கும் சூரியன்:

சில சமயம் இந்த ஆற்றலானது குறைவாகவும், அதிகமாகவும் சூரியனிடமிருந்து வெளிப்படுகிறது. இந்த நிலையில், நாளை பூமியை சூரிய புயல் தாக்கலாம் என்று நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது, சூரியனின் செயல்பாடு திடீரென்று மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதாகவும், சூரியப்புள்ளி பலமடங்கு அதிகரித்து, வெடித்து, சூடான பிளாஸ்மாவை விண்வெளிக்கு அனுப்பும் என கூறப்படுகிறது.

கரோனல் மாஸ் எஜெக்ஷன்:

இதுதொடர்பாக நாசா கூறியதாவது, கடந்த வாரத்தில் மட்டும், சூரியனில் சூரிய புள்ளிகளின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளது. சூரியனின் மேற்பரப்பில் கருப்பு மார்க்குகள் ஒவ்வொரு நாளும் பல கரோனல் மாஸ் எஜெக்ஷனை வெளிப்படுத்துகின்றன. அதாவது, சூரியன் மேற்பரப்பில் பல சூரியப்புள்ளிகள் தோன்றி, சூடான பிளாஸ்மாவை விண்வெளியில் வெளியிடுகின்றன.

சூரிய புள்ளிகள் (Sunspots) என்பது காந்தப்புலம் மிகவும் வலுவாக இருக்கும் சூரியனில் உள்ள கரும்புள்ளிகள் ஆகும். சூரியனிலுள்ள வாயுக்கள் சுற்றிச் சுழலும்போது ஏற்படும் மோதலினால் இவை தோன்றுகின்றன. அவைகள் கரோனல் மாஸ் எஜெக்ஷன்களை (CMEs) உருவாக்க முடியும். அவை சூரியனில் இருந்து அதிக வேகத்தில் வெளியேற்றப்படும் பிளாஸ்மாவின் பெரிய வெப்ப ஆற்றலாகும்.

இந்த கரோனல் மாஸ் எஜெக்ஷன்களில் (CMEs) ஒன்று வரும் நாட்களில் பூமியைத் தாக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. நாளை (நவ.25ம் தேதி) பிற்பகுதியில் நமது காந்தப்புலம் மற்றும் வளிமண்டலத்தில் மோதலாம் என்று நாசா கூறியுள்ளது. இந்த சூரிய புயலின் பாதைகளை விஞ்ஞானிகள் முழுமையாக ஆய்வு செய்த பிறகே இது உறுதி செய்யப்படும் என்றுள்ளனர். சூரிய எரிப்பு மற்றும் சி.எம்.இ. ஆகிய இரண்டும் சூரியனின் காந்தப்புலத்தின் மூலம் சூரியனில் உள்ள இயக்கங்கள் மூலம் திரிக்கப்பட்டு அழுத்தப்படுவதால் சூரிய புயல் ஏற்படுகிறது.

புவி காந்தப் புயல்:

இருப்பினும், சூரிய வெப்ப எரிப்பு என்பது சூரியனில் உள்ள காந்தப் புலங்களின் ஸ்னாப்பிங் மற்றும் மறுசீரமைப்பால் தூண்டப்படும் ஒளியின் அபரிமிதமான வெளியீடு ஆகும்.  சூரிய புயலின் துகள்கள் வருவதற்கு ஒரு நாள் அல்லது அதற்கு மேல் ஆகும்போது, ஒளியும், கதிர்வீச்சும் வெறும் 8 நிமிடங்களில் நம்மை வந்தடையும் என்றுள்ளனர். ஒரு கரோனல் மாஸ் எஜெக்ஷனின் துகள்கள் பூமியின் காந்தப்புலம் மற்றும் வளிமண்டலத்தைத் தாக்கும்போது, அது புவி காந்தப் புயலை ஏற்படுத்தும்.

சூரியனின் வெடிப்புகளால் பூமியின் காந்தப்புலம் தீவிரமாக சீர்குலைக்கப்படும்போது ஒரு புவி காந்த புயல் ஏற்படுகிறது எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சூரியனில் இருந்து ஒரு பெரிய பிளாஸ்மா புயல் வெடிக்கும்போது, அந்த புயல் பூமியின் காந்தப் புலத்திற்கு எதிர் திசையில் ஒரு காந்தப்புலத்தை கொண்டு செல்லும் போது, நமக்கு ஒரு ‘ சூர்ய புயல்’ மற்றும் ஒரு புவி காந்த புயலை ஏற்படுத்துகிறது.

பாதிப்புகள்:

மேலும், G1 (மைனர்) முதல் G5 (தீவிரம்) வரையிலான அளவில் அளவிடப்படும் CMEஇன் சக்தியைப் பொறுத்து புவி காந்த புயல்கள் வலிமையில் வேறுபடுகின்றன. புயல்களில் மிகவும் சக்தி வாய்ந்தது மிகவும் குறைவானது. 11 வருட சூரிய சுழற்சியில் 1700 G1 புயல்கள் இருக்கலாம், அதே நேரத்தில் 100 G4 புயல்கள் மற்றும் 4 G5 புயல்களை மட்டுமே நாம் காண முடியும் எனவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் நாளை சூரிய புயல் ஒன்று பூமியை தாக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

பூமியில் இருந்து சூரியன் 15 கோடி கி.மீ தொலைவில் இருக்கிறது. அதன் மேல் பகுதியில் வெப்பம் குறைந்தபட்சம் 5000 டிகிரி செல்ஷியஸ் இருக்கும். சூரியனிடமிருந்து வெப்ப ஆற்றல் (சூரியப்புயல்) வெளிப்படும் நேரத்தில் தொலைதொடர்பு மற்றும் இண்டர்நெட் போன்றவை பாதிப்புக்குள்ளாகும். இதனிடையே, சூரியப்புயல் பற்றி தெரிந்துக்கொள்ளவும், சூரிய ஆற்றலை ஆராய்ச்சி செய்யவும் அமெரிக்கா, இந்தியா உள்பட பல நாடுகள் சாட்லைட்டுகளை விண்ணுக்கு அனுப்பியுள்ளனர். அதில், ஒன்று தான் செப்டம்பர் 2ம் தேதி இந்தியாவின் இஸ்ரோ அனுப்பி இருக்கும் ஆதித்யா எல் 1 விண்கலம் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்