ஜெயம் ரவியின் ஜன கன மன படத்தில் வில்லனாக நடிக்க உள்ளாரா சூப்பர் ஸ்டார் பட வில்லன்?!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பா.ரஞ்சித் இயக்கி இருந்த திரைப்படம் காலா. இந்த படத்தில் மிரட்டல் வில்லனாக அசால்டாக நடித்து இருப்பார் நானா படேகர். இவர் பாலிவுட்டில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராவார்.
இவர் தற்போது மீண்டும் தமிழில் நடிக்க உள்ளார். ஜெயம் ரவி நடிக்கும் 26வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தினை என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய படங்களை இயக்கிய அஹமத் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ஜன கன மன என தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் அர்ஜுன், ரகுமான் என ஏற்கனவே இரு முக்கிய நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
இதே படத்தில் தற்போது நானா படேகரும் இணைந்துள்ளதால் அவர் வில்லனா இல்லை ஏதேனும் முக்கிய கதாபாத்திரமா என பொறுத்திருந்து பார்க்கலாம். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.