30 நாட்கள் பரோல் கேட்டு முதல்வருக்கு நளினி, முருகன் கடிதம்..!

30 நாட்கள் பரோல் கேட்டு முதல்வருக்கு நளினி, முருகன் கடிதம்..!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி,முருகன் 30 நாள்கள் பரோல் கேட்டு தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட, பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் கடந்த 29 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளனர். இந்த 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானத்தை நிறைவேற்றியது. அந்த தீர்மானத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். ஆளுநர் ஒப்புதல் அளிக்காத விவகாரம் உச்ச நீதிமன்றம் சென்றும் இன்னும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இதற்கிடையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, முருகன் 30 நாள்கள் பரோல் கேட்டு தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். சென்னையில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள தாய் பத்மாவதியை கவனித்துக்கொள்ள 30 நாள் பரோல் நளினி  கோரியுள்ளார்.

சமீபத்தில் அற்புதம்மாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan
Join our channel google news Youtube