பாஜகவில் இணைவது குறித்த கேள்விக்கு நகுல்நாத் பதில் என்ன தெரியுமா..? வெளியான வீடியோ ..!

Nakul Nath: இன்னும் ஓரிரு நாள்களில் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்க உள்ளது. மத்திய பிரதேசத்தில் பல காங்கிரஸ் தலைவர்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு மாறிய நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் மற்றும் அவரது மகன் நகுல் நாத் விரைவில் பாஜகவில் இணையுள்ளதாக கடந்த வாரம் மத்திய பிரதேச அரசியல் வட்டாரத்தில் தகவல் வெளியானது.

READ MORE- போராட்டத்தில் விவசாயி எப்படி இறந்தார்..? வெளியான அதிர்ச்சி தகவல்..!

இந்நிலையில், இந்த தகவலை  எம்.பி நகுல்நாத் திட்டவட்டமாக நிராகரித்தார். இதுகுறித்து நகுல்நாத்  கூறுகையில் “லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக நானும், கமல்நாத்தும் பா.ஜ.க.வுக்கு செல்கிறோம் என பல வதந்திகளை பாஜகவினர் பரப்பி வருகின்றனர். அதை தெளிவாக கூறுகிறேன். கமல்நாத்தும், நானும் பாஜகவில் சேரப் போவதில்லை, வரும் தேர்தலில் தோல்விக்கு பயந்து பாஜகவில் நாங்கள் இணைவதாக பாஜகவினர் பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

மரியாதைக்குரிய கமல்நாத் அவர்கள் பாஜகவில் சேரவில்லை, நானும் பாஜகவில் சேரவில்லை என்பதை இன்று இந்த மேடையில் இருந்து தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்று சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள நவேகானில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கூறினார்.

இதுகுறித்து முன்னதாக, கமல்நாத்தும், “இதை நீங்கள் எப்போதாவது என் வாயிலிருந்து கேட்டிருக்கிறீர்களா..? ஏதாவது அறிகுறி இருக்கிறதா..? எதுவும் இல்லை” என்று கூறினார். கடந்த பொதுத்தேர்தலின் போது மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் 28 இடங்களை பாஜக கைப்பற்றியது. மேலும் கமல்நாத் குடும்பத்தின் கோட்டையான சிந்த்வாரா தொகுதியை மட்டுமே காங்கிரஸால் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது.

READ MORE- ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு ரூ. 30 லட்சம் அபராதம்

இந்த முறை பாஜக மத்திய பிரதேசத்தில் கமல்நாத் குடும்பத்தின் கோட்டையாக உள்ள சிந்த்வாரா தொகுதியிலும் வெற்றி பெற்று தங்கள் ஆதிக்கத்தை நிறுவ முயற்சி செய்துவருகிறது. சிந்த்வாரா தொகுதியின் எம்.பி.யாக நகுல்நாத் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan

Leave a Comment