எனது நீண்ட நாள் கனவும் நிறைவேறியது.! – நெகிழ்ச்சியில் தர்ஷா குப்தா..!

எனது நீண்ட நாள் கனவும் நிறைவேறியது.! – நெகிழ்ச்சியில் தர்ஷா குப்தா..!

எனக்கு ரொம்ப நாள் கனவு சினிமாவில் நடிக்கிறது என நடிகை தர்ஷா குப்தா கூறியுள்ளார். 

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ரூத்ர தாண்டவம். இந்த படத்தில் ரிச்சர்டுக்கு ஜோடியாக நடிகை தர்ஷா குப்தா நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

இந்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

RudraThandavamPressMeet

அதில் பேசிய  தர்ஷா குப்தா ” தர்ஷா குப்தா என்றாலே, குக் வித் கோமாளி விஜய் தொலைக்காட்சி தான்.. எனக்கு ரொம்ப நாள் கனவு சினிமாவில் நடிக்கிறது.. அந்த கனவை இயக்குனர் மோகன் ஜி நிறைவேற்றியுள்ளார்.. எனக்கு மேக்கப் இல்லாமல் கிராமத்து பெண்ணாக ஒரு படத்தில் நடிக்க நீண்ட நாள் கனவு… எனது முதல் படமே பெரிய குழுவுடன் பண்ணியது மிகவும் பெரிய பெருமாக நினைக்கிறன்..

RudraThandavamPressMeet 3

எல்லா பெரிய பெரிய நடிகர்கள் நடித்துள்ள்ளார்கள்.. எனக்கு மட்டும் தான் முதல் படம்..இந்த வாய்ப்பை கொடுத்த இயக்குனர் மோகன் ஜி சாருக்கு நன்றி.. படத்தில் என்னுடைய கதாபாத்திரம் கிராமத்து பொன்னாக ஒரு தைரியமான பெண்ணாக நடித்துள்ளேன்… படம் முழுவதும் நான் மேக்கப் இல்லாமல் நடித்துள்ளேன்.. எனக்கு ஒரு சவாலான கதாபாத்திரம்..இந்த வாய்ப்பை கொடுத்த அனைவர்க்கும் நன்றி.” என கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube