மருத்துவமனையில் இருந்து இன்று முத்தையா முரளிதரன் டிஸ்சார்ஜ்..!

முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சுழல்பந்து பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் உள்ளார். ஹைதராபாத் அணி தற்போது சென்னையில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

நேற்று பயிற்சியின் போது முரளிதரனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் ரத்த குழாயில் அடைப்பு இருந்தது. இதனால், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

முரளிதரனுக்கு ஆஞ்சியோ சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது இதைத் தொடர்ந்து சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.

author avatar
murugan