காயம் காரணமாக ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய கேப்டன் ஹர்திக் பாண்டியா?

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடுவார் அதுவும் கேப்டனாக விளையாடுவார் என அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு குஜராத் அணிக்காக கேப்டனாக விளையாடிய ஹார்த்திக்கை வரும் 2024 ஐபிஎல் தொடரில் தங்களுடைய அணியில் விளையாட வைக்க மும்பை இந்தியன்ஸ் அவரை வாங்கியது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஹர்திக் பாண்டியா கேப்டனாக மும்பை அணிக்காக விளையாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த நிலையில், அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஒரு தகவல் பரவி வருகிறது. அது என்னவென்றால், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா விளையாடமாட்டாராம்.

டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய ருதுராஜ் கெய்க்வாட்..!

இந்த ஆண்டு (2023) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் பங்களாதேஷுக்கு எதிரான போட்டியின் போது ஹர்திக் பாண்டியாவுக்கு கணுக்கால் காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் முழுவதுமாக விளையாடமுடியாமல் போனது. ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்பை அவர் இழந்தார்.

எனவே, அந்த காயம் இன்னும் ஹர்திக் பாண்டியாவுக்கு சரியாகவில்லை என்ற காரணத்தால் அடுத்ததாக இந்தியா விளையாடிய ஆஸ்ரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் மற்றும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தான் விளையாடினார். இந்த டி20 தொடர்களை தொடர்ந்து ஹர்திக் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடமாட்டார் என்ற தகவல் பரவிக்கொண்டு இருக்கிறது.

இந்த தகவல் பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. அவர் அடுத்த ஆண்டு ( 2024) ஐபிஎல் போட்டிகளில் விளையாடவில்லை என்றால் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியை கேப்டனாக ரோஹித் ஷர்மா வழிநடத்துவார் எனவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.