பணக்காரர் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த முகேஷ் அம்பானி…!

சீனாவை சேர்ந்த ஜாங் ஷான்ஷனின் சொத்துமதிப்பு சரிவை கண்டுள்ள நிலையில், பிரபல தொழில் அதிபரான முகேஷ் அம்பானி பணக்காரர் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். 

புளூம்பெர்க் பணக்காரர் பட்டியலில், ஆசியாவில், பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானி முதல் இடத்தில் இருந்தார். கடந்த டிசம்பரில் இரண்டு ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த அம்பானியை பின்னுக்குத்தள்ளி, சீனாவில், பாட்டில் குடிநீர் வணிகத்தில் உச்சத்தில் உள்ள ஜாங் ஷான்ஷன் என்பவர் முதல் இடத்தை பிடித்தார்.

தற்போது, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு தற்போது 5.84 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. அதேசமயம் சீனாவை சேர்ந்த ஜாங் ஷான்ஷனின் சொத்துமதிப்பு 5.59 லட்சம் கோடி ரூபாய் குறைந்துள்ளது. கடந்த வாரம் இவரது வணிகம் 20% இழப்பை சந்தித்ததால் இவரது சொத்து மதிப்பு சரிவைக் கண்டுள்ளது. இதனையடுத்து, தற்போது பிரபல தொழில் அதிபரான முகேஷ் அம்பானி பணக்காரர் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.