பும்ராவை வணங்கிய முகமது சிராஜ் ..! வைரலாகும் வீடியோ ..!

ஐபிஎல் 2024 : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு பெங்களூரு அணியின் முகமது சிராஜ், மும்பை அணியின் பும்ராவை வணங்கிய வீடியோவானது தற்போது வைரல் ஆகி கொண்டிருக்கிறது.

ஐபிஎல் தொடரில் நேற்றைய 25-வது போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் பெங்களூர் அணியை மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது. டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த பெங்களுரு அணி டு பிளெசிஸ், தினேஷ் கார்த்திக், ரஜத் பட்டிதர் மூவரின் உதவியோடு 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது.

அதன் பிறகு மும்பை அணியில் இஷான் கிஷன், சூர்யகுமார் அதிரடியில் 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 199 ரன்கள் எடுத்து போட்டியில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணி பேட்டிங் செய்கையில் சிறப்பாக பந்துவீசிய மும்பை அணியின் ஜஸ்பிரீத் பும்ரா 4 ஓவர்கள் பந்து வீசி 21 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

இந்த சிறப்பான பந்து வீச்சின் மூலம் நேற்றைய போட்டியின்  ஆட்டநாயகன் விருதையும் வென்றிருப்பார். மேலும், இந்த போட்டியில் பெங்களூரு அணியின் முகமது சிராஜ் இந்த ஐபிஎல் தொடரில் பெரிதாக ஒரு பெர்ஃபாமன்ஸ் சரியாக இது வரை அமையவே இல்லை இது வரை அவர் 5 போட்டிகளில் விளையாடி வெறும் 4 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்றைய போட்டி முடிந்த பிறகு விளையாடிய வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் கைகொடுக்கும் பொழுது முகமது சிராஜ், பும்ராவை கண்டதும் குனிந்து வணங்கி மரியாதையை செலுத்துவார். மேலும், அந்த வீடியோவில் விராட் கோலியும் ஹர்திக் பாண்டியாவும் கை தட்டி கொண்டு நட்புகளை பாராட்டுவது பார்ப்பவர்களை நெகிழ வைத்தது. ஐபிஎல் நிர்வாகம் தங்களது X தளத்தில் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி கொண்டிருக்கிறது.

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.