மிஸ்டர் இந்தியா ஜகதீஸ் லாட் கொரோனாவுக்கு பலியானார்….

மிஸ்டர் இந்தியா ஜகதீஸ் லாட் கொரோனாவுக்கு பலியானார்….

‘மிஸ்டர் இந்தியா’போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ‘ஜகதீஷ் லாட் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.

டெல்லியில் வதோதராவில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த நான்கு நாட்களாக ஆக்ஸிஜன் உதவியுடன் உயிருக்கு போராடி வந்துள்ளார்.இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று ஜகதீஷ் லாட் உயிரிழந்தார்.அவருக்கு வயது 34,மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

லாட் தனது சொந்த மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் இந்தியாவிற்காக பல பாடி பில்டர் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார். மேலும் இவர் மிஸ்டர் இந்தியா போட்டியில் கலந்துகொண்டு வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார்.இவரது பெயரில் பல சாதனைகளும் இடம்பெற்றிருக்கின்றன அதில் குறிப்பாக உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றது குறிப்பிடதக்கதாகும்.

Join our channel google news Youtube