34.4 C
Chennai
Friday, June 2, 2023

இன்று முதல் மொய்தீன்பாய் ஆட்டம் ஆரம்பம்..! லால் சலாம் படத்தின் புதிய அப்டேட்..!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து முடித்து அவருடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும்  ‘லால்சலாம்’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில்  நடிப்பதற்காக மும்பை சென்றுள்ளார். அவர் படத்தின் படப்பிடிப்புக்காக  மும்பை செல்லும் பொழுது விமான நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ கூட இன்று காலையில் வைரல் ஆனது.

லால்சலாம் திரைப்படத்தில் நடிகர்கள் விக்ராந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து, தற்பொழுது லால் சலாம் படத்தின் புதிய அப்டேட் இன்று இரவு 12 மணிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் முன்னதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது அந்த அப்டேட் வெளியாகியுள்ளது.

அது என்னவென்றால், ரஜினியின் சிறப்பு தோற்றதையும், அந்த தோற்றத்திற்கு வைத்திருக்கும் பெயரையும் வெளிட்டுள்ளது. அதன்படி, ரஜினிகாந்த் லால்சலாம் படத்தில் மொய்தீன்பாயாக நடிக்கவுள்ளார். லைக்கா தனது ட்வீட்டில், ‘அனைவரின் விருப்பமான பாய் மீண்டும் மும்பைக்கு வந்துவிட்டார், இன்று முதல் மொய்தீன்பாய் ஆட்டம் ஆரம்பம்…!’  என்று பதிவிட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே, ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்திற்கான ரிலீஸ் தேதி கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து தற்போது லால் சலாம் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.