அமைச்சர் அறிவுறுத்தல்..! அரசு பேருந்துகள் மீண்டும் இயக்கம்..!

அமைச்சர் அறிவுறுத்தல்..! அரசு பேருந்துகள் மீண்டும் இயக்கம்..!

BusStrike

சென்னையில் அரசு பேருந்துகள் மீண்டும் இயங்க தொடங்கியுள்ளது.

சென்னையில் சில இடங்களில் மாநகரப் பேருந்துகளை இயக்காமல் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். அரசு போக்குவரத்து துறையில் ஒப்பந்த முறையில் ஓட்டுநர்களை நியமனம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தற்பொழுது பேருந்துகள் வழக்கம்போல் இயங்கத் தொடங்கியுள்ளன.

அதன்படி, போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி சிவசங்கர் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தையில் நடத்திய நிலையில், அமைச்சரின் அறிவுறுத்தலையடுத்து சென்னை மாநகர பேருந்து ஊழியர்கள் போராட்டத்தினை கைவிட்டு பேருந்துகளை இயக்க தொடங்கியுள்ளனர்.

Join our channel google news Youtube