கோயில் காணிக்கை நகைகள்.. விளக்கம் அளித்த அமைச்சர் சேகர்பாபு.!

கோயில் காணிக்கை நகைகள்.. விளக்கம் அளித்த அமைச்சர் சேகர்பாபு.!

Minister sekar babu says about tamilnadu temples

இன்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் நாள் கூட்டம் காலையில் தொடங்கியது. அப்போது பல்வேறு துறை அமைச்சர்கள், உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்தனர். அப்போது அறநிலையத்துறை குறித்து உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதாவது கோயில் காணிக்கையாக செலுத்தப்படும் நகைகள் உருக்குதல் பற்றிய விவரங்கள் கேட்டிருந்தார்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் : கலைஞர் பெயர் வைத்தது தான் ஒரே காரணம்.! சேகர்பாபு பரபரப்பு…

அதற்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார். அவர் கூறுகையில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் காணிக்கையாக வரும் நகைகளை உருக்கி அதனை கோவில் கணக்கில் வைப்பு நிதியாக மாற்றும் திட்டத்தை 2006 முதல் 2010 ஆம் ஆண்டு ஆட்சி காலத்தில் கலைஞர் கருணாநிதி கொண்டு வந்தார்.

அப்போதான் திட்டத்தின் கீழ் கோயில் நகைகள் உருக்கி வைப்பு நிதியாக வைக்கப்பட்டன. ஆனால் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தது. இதனை அடுத்து தற்போது மீண்டும் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் பல்வேறு கோயில்களில் இருந்து 100 கிலோவுக்கும் அதிகமாக தங்க நகைகள் சேகரிக்கப்பட்டன.

இதில் குறிப்பிட்ட ஐந்து கோவில்களில் காணிக்கையாக வந்திருந்த தங்க நகைகளை உருக்கி சுமார் 190 கோடி ரூபாய் பணம் ஈட்டி அதனை கோவில் வைப்பு நிதியாக வைத்துள்ளோம். இதன் மூலம் ஆண்டுக்கு அந்த ஐந்து கோவில்களில் மட்டும் நான்கு கோடி ரூபாய் வட்டியாக கிடைத்து வருகிறது.

அதேபோல, தற்போது காணிக்கை நகைகளை சேர்த்து வைத்துள்ளோம். வரும் 20ஆம் தேதி மத்திய அரசின் உத்தரவின் கீழ் நகை உருக்கப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் நிதி கோயில் வைப்பு நிதியாக வரவு வைக்கப்படும். இதனால் ஆண்டுக்கு ஏழு கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் வகையில் இருக்கும். திருக்கோவில் வருவாய் அனைத்தும் ஓய்வு பெற்ற மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவின் தலைமையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்தார்.

Join our channel google news Youtube