அப்படி நடக்கவே இல்லை.. பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திட்டவட்டம்.!

சென்னை, அம்பத்தூர் ஆவின் நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள் யாரும் பணியமர்த்தப்படவில்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார். 

நேற்று சென்னை அம்பத்தூர் ஆவின் பால் தொழிற்சாலையில் குழந்தை தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்படுவதாகவும், அவர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படவில்லை என அவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டதாகவும் நேற்று செய்திகள் வெளியாகின.

இந்த சம்பவம் குறித்து பேசிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், ஆவின் பால் தொழிற்சாலையில் எந்தவித குழந்தை தொழிலாளர்களும் பணியமர்த்தப்படவில்லை எனவும், அங்கு நடந்தது 18வயதுக்கு மேல் உள்ள தொழிலாளர்களுக்கும் அங்கு உள்ள ஒப்பந்தரார்களுக்கும் இடையே நடந்த சம்பள பிரச்சனை என்றும் செய்திகள் தவறாக வெளிவந்துள்ளன என்றும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.