6 மாதத்திற்கு பிறகு பயன்பாட்டுக்கு வந்த காவேரி பாலம்.! அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.!

6 மாதங்களாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்த காவேரி பாலத்தை நேற்று அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். 

திருச்சியில், திருச்சி மாநகரம் மற்றும் ஸ்ரீரங்கத்தை இணைக்கும் காவேரி ஆற்றின் குறுக்கே இருக்கும் பாலமானது தினசரி அதிக வாகன நெரிசல் காரணமாக பழுதடைந்து காணப்பட்டது.

இதனை அடுத்து, கடந்த 6 மாதத்திற்கு முன்னர் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டு 2 சக்கர வாகனங்களுக்கு மட்டும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது. அதற்கடுத்து பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் பராமரிப்பு பணிகள் முடிந்து தற்போது, காவேரி பாலம் திறக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடு 6.84 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த மறுசீரமைக்கப்பட்ட பாலத்தை நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment