துணை முதல்வர் போல உதயநிதி ஸ்டாலின் செயல்படுகிறார்.! அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு.!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் போல செயல்படுகிறார் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். 

திருச்சியில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக மட்டுமல்லாமல், சிறப்பு திட்ட செயலாக்கத்திற்கும் அமைச்சராக இருப்பதால் கிட்டத்தட்ட துணை முதல்வர் போல செயல்பட்டு வருகிறார் என புகழ்ந்து பேசினார் அமைச்சர் அன்பில் மகேஷ்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment